இலங்கை இராணுவ வரலாற்றில் இடம் பிடித்த இரட்டையர்கள்!

55shares

இலங்கை இராணுவத்தில் வரலாற்றில் முதல் தடவையாக இரட்டையர்களான இராணுவ வீரர்களுக்கு பதவியுர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜயந்த செனவிரத்ன, பூரக செனவிரத்ன என்ற இரட்டையர்களுக்கே இப் பதவி உயர்வு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 1985 ஆண்டு நவம்பர் மாதம் இராணுவத்தில் கடற் படை அதிகாரிகளாக சேவையில் இணைந்தனர்.

தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் இருவரும் பயிற்சிக்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர். இதன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த இருவரும் வெவ்வேறு படைப் பிரிவுகளில் சேவையாற்றினர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கில் இருவரும் படை நடவடிக்கையில் கடமை புரிந்துள்ளனர். ஆரம்பம் முதல் இருவரும் இராணுவத்தில் சேவையாற்றி வந்தாலும் ஜயந்த செனவிரத்ன பதவி நிலையில் உயர்ந்தவராகவும், பூரக செனவிரத்ன அடுத்த பதவி நிலையிலும் கடமையாற்றியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6 ஆம் திகதி இருவரும் ஒரே நேரத்தில் மேஜர் ஜெனரல்களாக பதவியுயர்த்தப்பட்டமை ஒரு வரலாற்று சம்பவமாக பதிவாகியுள்ளது. இருவருக்கும் அவர்களது 53 ஆவது வயதில் அதாவது அவர்களது பிறந்த தினத்தின் போது பதவியுயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.

இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதிக்கு வழங்கிய உறுதிப்படுத்தலின் பிரகாரம் இரட்டையர்களான இராணுவ வீரர்களுக்கு குறித்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க