தனது இரு பிள்ளைகளுடன் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்த தந்தை; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

  • Sethu
  • September 10, 2018
48shares

வெலிகந்த, போஅத்த பகுதியில் தந்தையொருவர் தனது இரு பிள்ளைகளுடன் புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் பாய்ந்தே அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

காயமடைந்த மூவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

40 வயதான தந்தையும், அவருடைய 11 மற்றும் 5 வயதான மகன்களுமே இவ்வாறு புகையிரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குறித்த நபரின் மூத்த மகன் கொழும்பில் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க