காட்டுப் பகுதியில் நள்ளிரவு நடந்த அதிரடிக் கைது!

  • Shan
  • September 11, 2018
59shares

வவுனியா குருக்கள் புதுக்குளம், பூவரசங்குளம் பகுதியில் இன்றையதினம் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றிய கட்டுதுப்பாக்கியுடன் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றிருப்பதாக விஷேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இந்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூவரசங்குளம் காட்டு பகுதியில் பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில் சாந்தகுமார் லூகஸ் (வயது-25) என்பவரே கைதாகினார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க