கரைநோக்கி வந்த படகில் ஸ்ரீ லங்கா கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • Shan
  • September 11, 2018
681shares

காங்கேசன்துறை கடற்பரப்பில் 118 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இருவரும், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படகில் இருந்த மூவரும் 118 கஞ்சா பொதிகளாக பொதி செய்யப்பட்ட வண்ணம் படகில் கரைப் பகுதிக்கு கொண்டு செல்லும் போது கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கடற்படையினரால், காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணையின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதையும் தவறாமல் படிங்க