சிறுமியை கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்ற இளைஞர்!

  • Shan
  • September 11, 2018
55shares

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக இளைஞர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து வவுனியா பொலிஸார் தெரிவிக்கையில்,

”கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15வயதுடைய சிறுமியை குறித்த இளைஞர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அனுராதபுரம் பகுதியில் தங்கியிருந்ததாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

சிறுமியின் உறவினர்களுக்கு இது தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து அனுராதபுரம் சென்று சிறுமியை அழைத்து வந்துள்ளனர்.

நேற்றைய தினம் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தமது மகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு ஒன்றினையும் சிறுமியின் பெற்றோர் மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து நேற்று வவுனியா சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த 28வயதுடைய சிவராசா கிருஸ்ணராசா என்ற இளைஞனை நாம் கைது செய்துள்ளோம். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க