அமெரிக்காவை நோக்கி நகரும் பேராபத்து! பதற்றமும் பரபரப்பும் சூழ்ந்துள்ள கிழக்குக்கரை!

  • Shan
  • September 11, 2018
107shares

அமெரிக்காவின் கிழக்கு கடற் கரையோரப்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையினால் பாரிய சூறாவளி ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கரோலினாஸ் உள்ளிட்ட கிழக்கு பகுதிகளுக்கு சூறாவளி அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், வடக்கு கரோலினா மற்றும் வெர்ஜினியா ஆகிய பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாதவாறு மிக மோசமாக இந்த சூறாவளி தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 10 லட்சம் மக்கள் கரையோரப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்காம் நிலை சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ள ப்ளோரன்ஸ் என்ற சூறாவளி மணிக்கு 195 கிலோமீற்றர் வேகத்தில் கடந்து செல்லும் என்று பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் கடும் மற்றும் வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு பரபரப்பான நிலையில் இயற்கையின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில், வட கரோலினா முதல்வர் ரோய் கூப்பர், பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வட கரோலினாவுக்கு தென்கிழக்காக சுமார் 1980 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள ப்ளோரன்ஸ் நாளை புதன்கிழமை தரையை தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க