இந்துக் கோவில்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் அதிரடி!

  • Shan
  • September 11, 2018
216shares

இலங்கையிலுள்ள இந்து ஆலயங்களில் மிருக பலி பூஜையைத் தடை செய்யக்கோரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஸ்ரீ லங்காவின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக் கோவில்களில் யாழ் மேல் நீதிமன்றால் வேள்விக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க