அடுப்பங்கரையில் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

57shares

தீ காயங்களுடன் 11வயது பாடசாலை சிறுமி ஒருவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார் இந்த சம்பவம் 11.09.2018. செவ்வாய்கிழமை 0415 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவூ தோட்டபகுதியை சேர்ந்த குறித்த சிறுமி வீடடில் அடுப்பிற்கு அருகாமையில் இருந்து குறித்த சிறுமி அணிந்திருந்த ஆடையில் தீ பரவியதால் சிறுமியின் உடம்பு பகுதியில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு எரிகாயங்களுக்கு உள்ளான சிறுமி தரம் 06ல் கல்வி பயிலும் எம்.பவித்ரா என்ற சிறுமியே இவ்வாறு பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சிறுமியின் பெற்றோர்கள் தொழிலுக்கு சென்று இருந்த வேளையிலே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

இந்த சிறுமி அனிந்திருந்த ஆடையில் எவ்வாறு தீ பற்றியது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரனைகலை ஆரம்பித்துள்ளதோடு மேலதிக சிகிச்சைக்காக சிறுமி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகலை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

இதையும் தவறாமல் படிங்க