சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட ஐந்து பேரின் நிலை!

29shares

வட்டவலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ரொஸால அட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேரை வட்டவலை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த கைது சம்பவமானது 11.09.2018.செவ்வாய்கிழமை மாலை 03.15 மணிஅளவில் கைது செய்யபட்டதாக வட்டவலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வட்டவலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த 05 சந்தேக நபர்களும் கைது செய்யபட்டதாகவும் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்த பட்ட உபகரனங்களையும் வட்டவலை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் கைது செய்யபட்டவர்கள் வட்டவலை ரொஸால பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்டவர்கள் 05 பேரும் 12.09.2018. புதன் கிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதாக வட்டவலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகலை வட்டவலை பொலிhர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

இதையும் தவறாமல் படிங்க