கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக தீயணைப்புபிரிவு உருவாக்கம்

10shares

கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் முறையாக தீயணைப்பு பிரிவுஉருவாக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 97 மில்லியன் நிதிஒதுக்கீட்டில் கிளிநொச்சிக்கான தீயணைப்பு பிரிவு அங்குராபர்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருக்கில் அமைக்கப்பட்ட மாவட்ட தீயணைப்பு பிரிவின் அலுவலகமும் தீயணைப்புக்குரிய வாகனங்கள்உள்ளிட்டன உத்தியோகபூர்வமாக கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில்ஏற்பட்ட பாரிய தீ காரணமாக சந்தையின் பெரும் பகுதி தீயினால் எரிந்து பல இலட்சங்கள்பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்திருந்தன.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கான தீயணைப்பு பிரிவு ஒன்றின் தேவை குறித்து பல தரப்பினர்கள்மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கமைவாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டிஎம் சுவாமிநாதனினால் 97 மில்லியன்கள் அமைச்சின் ஊடாகஒதுக்கப்பட்டு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு உத்தியோக பூர்வமாககையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டிஎம்சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம், மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் சுரேஸ், வடக்குமாகாண சபை உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிபிள்ளை, தவநாதன், கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் சபையின் உறுப்பினர்கள், என பலர் கலந்துகொண்டனர்

இதையும் தவறாமல் படிங்க