அண்மையில் திறக்கப்பட்ட பாரிய நீர்த்தேக்கத்தால் கிடைத்த அதிஷ்டம்!

  • Shan
  • September 12, 2018
134shares

இலங்கையில் அண்மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்த்தேக்கம் ஒன்றின் முதலாவது அறுவடை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி பொலன்னறுவை மாவட்டம் எலஹெர பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பல பிரதேசங்களில் விவசாய உற்பத்தி மூலமான அறுவடை வெற்றிக்கிரமாக இடம்பெற்றுவருகிறது.

மொரஹாகந்த நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் இந்த பிரதேசத்தில் பல பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி கிடைத்தமையே இதற்கான காரணம் என்று மொறகாகந்த வலையத்திட்ட முகாமையாளர் ஹேமந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

மொரஹாகந்த மகாவலி வலையத்தில் விவசாயிகள் பல வருட காலமாக நீர்ப்பாசன வசதியின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில், இம்முறை பெரிய வெங்காய உற்பத்தி மூலமான அறுவடை வெற்றியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க