யாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மனித எலும்புக்கூடு!

  • Shan
  • September 12, 2018
279shares

யாழ்ப்பாணம் காங்கேசன் துறைப் பகுதியில் இன்று காலை எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன் துறைப் பகுதியிலுள்ள தொடருந்துத் தடத்திலிருந்து ஐம்பது மீட்டர் தொலைவிலேயே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த எலும்புக்கூடு ஆண் ஒருவருடையது என பொலிஸாரால் கூறப்பட்டுள்ள அதே நேரம் நான்கு மாதங்களைக் கடந்ததாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எமது செய்திப்பிரிவு காங்கேசன் துறைப் பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த எலும்புக்கூடு தொடர்பில் தம்மிடம் மேலதிக தகவல்கள் இல்லை எனவும் பிற்பகல் இரண்டு மணிக்கு நீதவான் குறித்த இடத்திற்கு வருகைதந்தபின்னரே மேலதிக தகவல்கள் தொடர்பில் தெரியவரும் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!