முல்லைத்தீவில் கொடூர வாள்வெட்டு மற்றும் துப்பாக்கி சூடு! நால்வர் மருத்துவமனையில்!

170shares
Image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளம் பகுதியில் நேற்று (11) இரவு 11.00 மணியளவில் ஆறுபேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வீடுபுகுந்து வீட்டில் இருந்து தாய், தந்தை பிள்ளை ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது நாட்டு துப்பாகிசூட்டுக்கு இலக்கான வாள்வொட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்:- கைவேலி மருதமடு குளம் பகுதியில் வீடு ஒன்றிற்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் தாக்குதல் வீட்டில் இருந்த தாய் தந்தை மகன் மீது கண்மூடித்தனமாக வாள் வெட்டு தாக்குதுல் நடத்தியுள்ளது.

இதன்போது வீட்டில் இருந்த 45 வயதுடைய செல்வகுமார் 43 வயதுடைய செ.குசேலகுமாரி மற்றும் 21 வயதுடைய மகனான செ.கோபிநாத் ஆகியோர் வாள்வெட்டுக்கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் இரவு வேளை வாள் வெட்டவந்த கும்பல் மீது நாட்டுத்துப்பாகிகொண்டு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது வாள்கள் கொண்டு வெட்ட வந்த கும்பலை சேர்ந்த 4ஆம் வட்டாரம் கோம்பாவில்லினை சேர்ந்த 22 வயதுடைய திருச்செல்வம் கபிலன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வாள்வெட்டில் காயமடைந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிக்சைக்காக மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

வாள்வெட்டில் காயமடைந்த தாயார் புதுக்குடியிருப்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்.

குறித்த வாள்வெட்டு மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்.

இதையும் தவறாமல் படிங்க