முல்லைத்தீவில் முற்றுகைக்குள் கடற்தொழில்அதிகாரிகள் வெளி மீனவர் ஆக்கிரமிப்புக்கு போர்க்கொடி

  • Prem
  • September 12, 2018
14shares

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மாத்தளன் பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பங்கள் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரியின் ஊர்தியினை வெளியில் செல்லவிடாது வழிமறித்து மறியல் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளன

சுருக்கு வலையை பயன்படுத்தி தங்களை தொழில் செய்ய அனுமதிக்குமாறு வலியுறுத்தியே மாத்தளன் பகுதி மீனவர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.


வெளிமாவட்டத்திலிருந்து வந்திருக்கும் மீனவர்கள் சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள மாத்தளன் மீனவர்கள் இந்த நிலமைகள் காரணமாக தமது வாழ்வாதரம் முழுமையாக பறிபோகும் ஆபத்தில் இருப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆத்துடன் தங்களுக்கான முடிவினை அதிகாரிகள் தெரிவிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக எச்சரித்தும் எரிநெய் கலன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து இந்த பிரச்சனைக்கு விரைவில் உயர் அதிகாரிகளுடன் கதைத்து முடிவு எடுத்து கொடுப்பதாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர் இதன்பின்னர் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க