தமிழர் பகுதியில் பாரிய சந்தேகங்களை எழுப்பியுள்ள எலும்புக்கூடு

  • Shan
  • September 14, 2018
126shares

மன்னார் சதொச வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுவருகின்றன.

இந் நிலையில் நேற்றைய தினம் அகழ்வுப் பணியின்போது கை கால்கள் கட்டப்பட்ட நிலையையில் புதைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுக் கொன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் மிகவும் நெருக்கத்துக்குள் புதைக்கப்பட்ட விதமாகவும் காணப்பட்டது.

இதனடிப்படையில் இந்த மனித எச்சம் தற்போது பாரிய சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

கைகால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டனரா?

இதையும் தவறாமல் படிங்க