மறுகண்பார்வை போகமுன்னர் புதல்வனைத்தாருங்கள். இலங்கையிலிருந்து சாந்தனின் அன்னை டெல்லிக்கு உருக்ககடிதம்

  • Prem
  • September 14, 2018
28shares

ஒரு கண் பார்வையை ஏற்கனவே இழந்த தனக்கு மறுகண் பார்வையும் பறிபோகமுன்னர் தனது புதல்வன் சாந்தனை பார்க்கவேண்டும் என, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறை தண்டனையில் வாடும் சாந்தனின் அன்னை மகேஸ்வரி இலங்கையிலிருந்து டெல்லிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்திய அரசதலைவர்> இந்தியபிரதமர், தமிழக ஆளுநர் ,தமிழக முதல்வர் உட்பட்ட இந்தியஅரசியல் பிரபலங்களுக்கு 72 வயதான மகேஸ்வரி தில்லையம்பலம் அவர்களால் இந்தக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் தனக்கு மகன் 27 ஆண்டுகளாக சிறையில் வாடுவதாகவும் தனது கணவர் தில்லையம்பலம் கடந்த 2013ஆம் ஆண்டு மரணமடைந்தபின்னர் தனக்கு ஒற்றைக்கண்ணின் பார்வை மங்கியதாகவும் எனவே இறுதிக்காலத்தில் தன்னை பார்க்கவாவது மகன் சாந்தனை தன்னிடம் அளிக்கும்படி மன்றாடி வேண்டிக் கொள்வதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் அளித்து இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த ஏழு பேரையும் விடுவிக்கக் கோரி அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழக அரசு அனுப்பியது. இந்நிலையில் ,தமிழக அரசின் பரிந்துரை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கோரியுள்ளநிலையில் இந்த கடிதம் டெல்லிக்கு அனுப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க