யாழ்ப்பாணத்தில் அதிகாலை நிகழ்ந்த பயங்கரம்; யார் அந்த மர்மிகள்?

266shares

யாழ். தென்மராட்சி கைதடி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும தெரியருவதாவது,

நேற்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ‘கைதடி ஏ9 வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15 இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டும், கூரிய ஆயுதங்களால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டவர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க