தமிழ் இளைஞன் மர்மக் கொலை; பெருமளவு பொலிஸார் சுற்றி வளைப்பில்!

207shares

போதைப் பொருளுக்கு எதிராகப் போராடிய தமிழ் இளைஞன் மர்மக்கொலை. இரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி வந்த இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாமன்கார்டன் பகுதியின் பாதுகாப்பிற்காக பொலிஸார் பெருமளவில் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. இரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியில் நேற்று மாலை நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அவருடைய தங்காபரணத்தை கொள்ளையிட்டு சென்றதுடன், மற்றுமொரு நபர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவத்தில் இரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியைச் சேர்ந்த 37 வயதான தனபால் விஜேரத்னம் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

கொலை செய்யப்பட்டவர் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்றைய தினம் நடத்தப்படவுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க