கடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகளுக்கு நடக்கப்பேவது என்ன?

135shares

தொழில்துறையில் புதிதாக ஈடுபடுவோருக்கு அரசு முன்வைத்துள்ள கடன் திட்டத்தை உரிய முறையில் வழங்குவதில் அரச வங்கிகள் பின்வாங்குகின்றன இவ்வாறு அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள என்டப்பிரைசஸ் சிறிலங்கா அபிவிருத்தித் திட்டத்துக்கு ஆதரவு வழங்காத அரச வங்கி அதிகாரிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தொழில்துறையில் புதிதாக ஈடுபடுவோருக்கு அரசு முன்வைத்துள்ள கடன் திட்டத்தை உரிய முறையில் வழங்குவதில் அரச வங்கிகள் பின்வாங்குகின்றன.வங்கியில் புதிதாக கடன் பெற வரும் இளைஞர், யுவதிகளை கடன் வழங்காமல் திருப்பியனுப்புகின்றனர். அவசியமற்ற கேள்விகளை தொடுத்து அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

அரசு முன்வைத்துள்ள இந்த புதிய கடன் திட்டத்தில் 15 லட்சத்துக்கு குறைவாக கடன் பெறுபவர்களுக்கு எவரும் பிணை நிற்கத் தேவையில்லை. எந்த வங்கியிலாவது அவ்வாறு கோருவதாயின் எமக்கு அறிவியுங்கள். அவ்வாறு கேட்டவரின் பெயர், வங்கியின் பெயர், எந்தக் கிளை என்பதை அறிவியுங்கள். என்டப்பிரைசஸ் ஸ்ரீ லங்கா திட்டத்தின் அவசர தொடர்பு இலக்கம் 2015 ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
`