இலங்கையில் மலசலகூட குழிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!

36shares

நான்கு வயதான சகோதரருடன் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி மலசலகூடக் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிஹிரிகமவத்த பிரதேசத்தில் வீட்டுக்கருகில் மலசல கூடத்திற்கென வெட்டப்பட்ட குழிக்குள் விழுந்தே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் குருவிகுலம கனிஸ்ட வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பில் கல்வி பயிலும் சௌமியா தில்ருக்சி என தெரிவிக்கப்படுகிறது.

மேசன் வேலை செய்யும் குறித்த சிறுமியின் தந்தையால் மலசலத்திற்கான குழி கட்டப்பட்டு பாதியில் விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அண்மைக்காலமாக பெய்த மழை காரணமாக குழிக்குள் 5 அடி வரைக்கும் நீர் நிரம்பி இருந்துள்ளது.

குறித்த சிறுமி கொங்கிரீட் பலகைகளை வைத்து மூடப்பட்ட குழிக்குள் விழுந்துள்ளதாக விசாணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பாடசலை விட்டு வந்த சிறுமி தனது தம்பியுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது குழிக்குள் விழுந்ததாக தம்பி தாயிடம் தெரிவித்துள்ளார்.

தாய் குழிக்குள் மரக்கட்டையொன்றை போட்டு சிறுமியை காப்பாற்ற முயற்சித்த போது அயலவர் கண்டு உடனே குழிக்குள் இறங்கி சிறுமியை வெளியில் எடுத்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமி நிக்கவரெட்டிய வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
`