யாழில் பகல் பொலிஸார் அதிரடி சோதனை; இரவு வாள்வெட்டு கும்பல் தாக்குதல்: என்ன நடக்கிறது யாழ்ப்பாணத்தில்?

314shares

யாழ். கோண்டாவில் பகுதியில் சற்றுமுன்னர் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியிலுள்ள சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பகுதியில் சிறப்பு அதிரடிபடையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று பகல் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
`