இயக்கச்சியிலிருந்து கிளிநொச்சி நோக்கி செல்லும் மாணவர் பேரணி

10shares

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்தநடை பவனி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இன்றைய நடைபவனி இயக்கச்சியிலிருந்து கிளிநொச்சி நோக்கி செல்வதாகஎமது செய்தியாளர் தெரிவித்தார்.

வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் தம்மை குறுகிய காலபுனர்வாழ்விற்குட்படுத்தி விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அனுராதபுரம்சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 14 ஆம் திகதி முதல் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வெலிக்கடை மெகசீன்சிறைச்சாலையிலுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகளும் கண்டி சிறைச்சாலைகளில் உள்ள 10தமிழ் அரசியல் கைதிகளும் இந்த தொடர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்இணைந்துகொண்டனர்.

இந்த கைதிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தாயகத்தின்பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் வலுவடைந்துவருகின்றன.

இந்நிலையில் நேற்று யாழ்.பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிணைந்து, அரசியல்கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிநடைபவனியொன்றை முன்னெடுத்த நிலையில் இரண்டாவது நாளாகவும் இந்த நடைபவனி தொடர்கின்றது.

இதையும் தவறாமல் படிங்க
`