மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை, விடுவிக்குமாறு கோரும் ஸ்ரீலங்கா அரசு

7shares

மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லுாஹிரு மடுசாந்தவைவிடுவிப்பது தொடர்பாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர்முஸ்தபா, மாலைதீவு ஜனாதிபதி இப்றாஹீம் முஹம்மத்சோபியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.மாலைதீவின் ஜனாதிபதி அப்துல் யமீனைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறி இவர் கைது செய்யப்பட்டார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான லுாஹிரு மடுசாந்த, கடந்தமூன்றறை வருடங்களுக்கு முன்னர், மாலைதீவு அரசாங்கத்தினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரின் மனைவி, இவரது பிள்ளைகளுடன் அமைச்சர் பைஸர் முஸ்தபாவைச் சந்தித்து, தனதுகணவரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதாறு கோரியிருந்தார்.

இந்நிலையில்அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஜனாதிபதியின் விசேட துாதுவராக மாலைதீவுக்கு விஜயம்மேற்கொண்டு மடுசாந்தவை விடுவிப்பது தொடர்பாக, மாலைதீவின் புதிய ஜனாதிபதி உட்பட அரசின் உயர்மட்டப்பிரிதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படுகிறது

இதையும் தவறாமல் படிங்க
`