காஞ்சிரம்குடாவில் சுட்டுவீழ்த்தப்பட்டவர்களின் 16 ஆவது நினைவேந்தல்

6shares
Image

அம்பாறை திருக்கோவில் காஞ்சிரம்குடாவில் இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 16 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டன.

திருகே்கோவில் சுப்பர்ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகிலுள்ள படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவுத்தூபியில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளும் இன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

படவிளக்கம் அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உட்பட ஏழு பேர் உயிர்நீத்தனர்.

இந்தப் படுகொலையின் 16 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், திருக்கோவில் 02 சுப்பர்ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகிலுள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் 13 ஆவது நினைவேந்தல் நிகழ்வும் நேற்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை நடைபெற்றன.

இதன்போது பொது அகல் விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக ஆத்ம சாந்தி வேண்டிய மௌனம் வணக்கம் செலுத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிநாயகம் சந்திரநேருவின் உருவப்படத்திற்கு அவரது மனைவி மலர்மாலை அணிவித்து தீபச் சுடர் ஏற்றினார்.

படுகொலை செய்யப்பட்ட தமது பிள்ளைகளின் உருவப்படத்திற்கு பெற்றோர்கள் மலர்மாலை அணிவித்து தீபம் ஏற்றி பிரார்த்தனைகளில் ஈடுபட்டன.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியினால் நினைவுப் பேருரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.

இந்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளில் திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டு கண்ணீரோடு மலர் தூவி மரணித்த உயிர்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிராத்தித்தனர்.

சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற காலப்பகுதியான கடந்த 2002 ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 09 திகதி மாலை காஞ்சிராம்குடா இராணுவ முகாமை நோக்கி இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உட்பட ஏழு பேர் பலியாகி இருந்தனர்.

இதேவேளை 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வெலிக்கந்தையில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அரியநாயகம் சந்திரநேரு, பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைபலனின்றி அடுத்த நாள் உயிரிழந்தார்.

தமிழீழ விடுதலை புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் அரசியல்துறை பொறுப்பாளரான கௌசல்யன் உட்பட இன்னும் சிலருடன் வாகனத்தில் பயணம் செய்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதையும் தவறாமல் படிங்க
`