சமூக வலைத்தளங்களை அதிரவைத்த புகைப்படம்; உண்மையில் நடந்தது என்ன?

779shares
Image

திருமணத்தின்போது திடீரென்று மணமகன் எழுந்து ஓடியதால் அவரது தந்தை தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது.

இந்த விசித்திர சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. தாலி கட்டியவரின் வயது அறுபத்தைந்து என்றும் மணப்பெண்ணின் வயது 21 என்றும் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

இது தொடர்பான புகைபடம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்படு பல்வேறு விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

மணமகனின் தந்தை தனது மகனுக்கு திருமணத்திற்காக பெண் பார்த்து பேசிமுடித்தார். இருந்தாலும் தான் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறிவந்த மகன், அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மகனை வற்புறுத்தி திருமணத்திற்குச் சம்மதிக்கவைத்த தந்தை எல்லா ஏற்பாடுகளையும் செய்துமுடித்தார்.

இந்த நிலையில் கல்யாணத்தன்று மாப்பிள்லையை எங்கு தேடியும் கிடைக்காததால் அனைவரும் கலவரமுற்றுலனர். அதன்போது அவர் தனது காதலியுடன் சென்று திருமணம் முடித்துள்ளதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குறித்த இளம் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்று அறுபத்தைந்து வயதான முதியவர் அவரது கழுத்தில் தாலியைக் கட்டியுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் குறிபிட்டன.

எவ்வாறாயினும் குடும்ப கௌரவத்திற்காக குறிக்கப்பட்ட திகதியிலேயே கல்யாணம் நடக்கவேண்டுமென்று அந்த தாலிகட்டல் செயலுக்கு பெண் வீட்டாரும் ஒப்புதலளித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
`