மூன்று பிள்ளைகளின் தாய் பள்ளத்தில் தவறி வீழ்ந்து பரிதாபப் பலி!

89shares

மலையகத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் நீர்வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் தவறிவிழுந்து பலியாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மஸ்கெலியா - காட்மோர் தோட்டப் பகுதியிலேயே இன்று காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் கால் இடறி பள்லத்தில் விழுந்ததாக கூறப்படுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் நீதவான் விசாரணைகளின்பின்னர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
`