ஸ்ரீலங்கா விமானசேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவரின் மோசடியை அம்பலப்படுத்திய அதிகாரி!

36shares

ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவின் நிதிமோசடி குறித்த தகவல்கள் வௌியாகியுள்ளன. 2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் டுபாயில் இருந்த சந்தைப்படுத்தல் உதவியாளரான பெண் ஒருவருக்கு மாடிக் குடியிருப்பொன்றை பெற்றுக் கொள்வதற்காக 2.4 மில்லியன் ரூபாவை அவர் ஒதுக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த நிதிமோசடி தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கன் நிறுவனத்தின் நிதிப் பிரிவு பிரதம அதிகாரியான யசந்த திசாநாயக்க, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தபோதே இந்த தகவல்கள் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
`