கிளிநொச்சி ஊடகவியலாளரைத் தாக்கிய பிரதேச சபை உறுப்பினர்கள்! பிரதேச சபை உறுப்பினரைத் தாக்கியது யார்?

18shares

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிராந்திய தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளரான மோகன் திணேஸ் மீதே அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கிளிநொச்சி நகரிலிருந்து திருநகரில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கொண்டிருந்த போது, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தலைமையிலான குழுவினர் ஊடகவியலாளரை தாக்கியதாக குறிப்பிடப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த மோகன் திணேஸ் என்ற ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அடையாளம் தெரியாத நபர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
`