தீர்த்து வைக்க முடியாத சிக்கலில் சிக்கியுள்ள புதுக்குடியிருப்பு சிவன்!

33shares

புதுக்குடியிருப்பு சிவன் கோவில் மணற்குளம் தொடர்பான சர்ச்சை கடந்த மாதம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் முன்னிலையில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் முன்னிலையில் இணக்கப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சர்சையினை ஏற்படுத்தியுள்ளது.

மணற்குளம்,மற்றும் சிவன் கோவில் காணிப் பிரச்சினை புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் குழுவிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் நீண்டகாலமாக அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்கள் மூவரும் கூட்டத்திற்கு ஒழுங்காக வராத நிலையில் பிரச்சினை தொடர் சர்ச்சை நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனையும் பொருட் படுத்தாமல் பிரதேச செயலாளர் ம.பிரதீபனின் முயற்சியால் கடந்த மாதம் இணக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட் ட போது இணைத் தலைவர்கள் மூவரும் இல்லாத நிலையில் இந்த பிரச்சனை தீர்த்து வைக்க முடியாது என்று புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தவைர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மணற்குளம் விவசாய அமைப்புக்களும் சிவன் கோவில் ஆலய நிர்வாகமும் மற்றும் பொது மண்டபத்தினை கட்டிவைத்த வயோதிப தாயாரும் 08.10.18 அன்று புதுக்குடியிருப்பு அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அபிவிருத்திக் குழு இணைத்தவைருக்கு கோரிக்கை அடங்கிய மனுக்களை கையளித்துள்ளார்கள்.

இதன் பின்னர் அவரிடம் கேட்ட போது இந்த மணற்குளம் மற்றும் சிவன் கோவில் காணிப்பிரச்சனை இன்னும் தீர்த்து வைக்கப்படவில்லை என்றும் அதனை தீர்ப்பதாக இருந்தால் மூன்று இணைத்தலைவர்களுக்கும் முன்னிலையில் தான் மக்கள் பிரச்சனையினை அபிவிருத்திக் குழு ஊடாக தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
`