தலைநகர் கொழும்பில் திடீரென ஏற்பட்ட சம்பவத்தால் கதி கலங்கிய மாணவர்கள்!

31shares

கொழும்பில் உள்ள பிரதான வீதியொன்று திடீரென தாழிறங்கியுள்ளதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு நாரஹென்பிட்டி சித்ரா லேன் பகுதியிலேயே இவ்வாறு நிலம் திடீரென தாழிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திடீர் தாழிறக்கத்தால் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் குறித்த பாதை ஊடாக பயணிப்பவர்களை வேறு வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
`