முல்லைத்தீவு சட்டவிரோத குடியேற்றங்கள் ஒத்துழைப்பு வழங்க தயார்

13shares

மகாவலி எல் வலய அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத குடியிருப்புக்களை தடுக்க தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தயார் என தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் அதிகளவான வெற்று காணிகள் காணப்படுவதனாலேய சட்டவிரோத குடியிருப்புக்கள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் ஸ்தாபகர் வீ. சிவசுப்பிரமணியத்தின் நினைவு நாள் இன்று பாடசாலையில் நடைபெற்றது.

பாடசலையின் அதிபர் தலைமையில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க சக வாழ்வு அமைச்சர் மணோகணேசன் பிரதம விருத்தினராக்க் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஷ்கரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

அதேவேளை, நாட்டில் காணப்பட்ட திட்டமிட்ட கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
`