இலங்கையில் இந்திய எரிபொருள் நிறுவனத்தின் அதிரடி!

107shares

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைத் தொடர்ந்து இந்தியன் எண்ணெய் நிறுவனமும் (IOC) நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் புதிய விலைக்கேற்ப 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெற்றோல் 172 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டீசல் 129 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 141 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய விலை அதிகரிப்பு கடந்த செப்டெம்பர் மாதம் பத்தாம் திகதிக்குப் பின்னர் சரியாக ஒரு மாதத்தில் மீண்டும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
`