பனிக்கன் குளத்திலிருந்து ஆரம்பமாகிய மூன்றாம் நாள் நடைபவனி

6shares

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டநடைபவனி மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

இவர்கள் இன்று காலை பனிக்கன் குளத்திலிருந்து தமது நடைபவனியைஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை நிபந்தனையின்றிவிடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 14 ஆம் திகதி உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இவர்களுக்கு அதரவாக கொழும்பு மகசின் மற்றும்கண்டி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் உணவு தவிர்ப்புபோராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனியைஆரம்பித்தனர்.

இந்த நடைபவனி கிளிநொச்சி,வவுனியாஊடாக அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
`