கயிற்றில் தொங்கிய மகளின் உடல்; கதறியழுத பெற்றோர்! காரணம் இதுவா?

613shares

மட்டக்களப்பில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தை சேர்ந்த அருளானந்தம் சாலினி என்கின்ற 18 வயது யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேற்படி யுவதியின் சடலம் நேற்றிரவு 11மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் அதனையடுத்து உடனே களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

காதல் தோல்வியால் ஏற்பட்ட மன விரக்தியாலேயே யுவதி தற்கொலை செய்திருக்கலாம் என அயலவர்கள் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.

இன்று காலை சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக செய்தியாளர் மேலும் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க