காணிகள் மீளளிப்பு தொடர்பான முக்கிய முன்னகர்வுகள்!

20shares

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது வரை படையினர் வசம் உள்ள நிலங்களை விடுவிப்பது தொடர்பில் இம் மாதம் 16ம் திகதி மாவட்டச் செயலாளர் தலைமையில் ஓர் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.

மாவட்டச் செயலகத்தில் இடம் பெறும் கலந்துரையாடலில் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படைத் தளபதிகள் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போதும் 4 ஆயிரத்து 265 ஏக்கர் நிலம் படையினர் வசமுள்ள நிலையில் அந்த பிரதேசங்களில் மக்களிற்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் உரியவர்களிடமே ஒப்படைக்கப்படும் அதற்காக மாவட்டந்தோறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படை அதிகாரிகள் அனைவரும் கூடி ஆராய்ந்து அதன் அறிக்கையை உடன் தனக்கு சமர்ப்பிக்குமாறு வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் பணிப்புரை விடுத்திருந்தார்.

அதேநேரம் மக்களின் காணிகள் டிசம்பர் 31ற்கு முன்பாகவும் படையினரின் பிடியில் உள்ள பாடசாலைகள் உடனடியாகவும் விடுவிக்கப்படும். என உத்தரவாதம் அளித்த நிலையில் முதலாவதாக யாழ்ப்பாண மாவட்டக் கூட்டம் 16ம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க