அமெரிக்காவை திருப்திப்படுத்த, சீனாவை ஏமாற்றிய இலங்கை!

28shares

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், சீனாவின் இராணுவத் தளம் அமையப்போவது இல்லை என ஸ்ரீலங்கா அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாட்டில் சீனாவினால் குத்தகைக்குப் பெறப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தில் சீனாவின் இராணுவத் தளம் அமையக்கூடும் என அண்மையில் அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.


சர்வதேச ரீதியான மிக முக்கியமான கடற்போக்குவரத்து மார்க்கத்தில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் கடற்படைத்தளம் அமைக்கப்படவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியிருந்தார்.

எனினும், இந்த விடயத்தை மறுத்துள்ள ஸ்ரீலங்கா பிரதமர் அலுவலகம், ஹம்பாந்தோட்டையில் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகள் இருக்காது எனவும், இது குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கடற்படையின் தென்பகுதி தலைமையகம்இ ஹம்பாந்தோட்டைக்கு நகர்த்தப்பட்டுஇ துறைமுகத்தின் பாதுகாப்பு கடற்படை வசமாகும் என பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்காவின் தென்பகுதி நகரான ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள துறைமுகத்தை, ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த வருடம், 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கியிருந்தது.

இந்த திட்டத்திற்கென, சீன அரசாங்கத்திடமிருந்து 1.4 பில்லியன் டொலர் கடனை ஸ்ரீலங்கம் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க