யாழ் நகர வெற்றிலை பாக்கு விற்பனைக் கடையை திடீர் முற்றுகையிட்ட பொலிஸார்!

76shares

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடை ஒன்றில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட சரவணை கிழக்கு வேலணை ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த நபரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உப பொலிஸ் பரிசோதகர் அனில்குமாரவின் தலைமையிலான பொலிஸாரே இவ்வாறு போலிநாணயத்தாளினை மாற்ற முற்பட்டவரை கைது செய்தனர். வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடையில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட போது இது தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.

குறித்த கடைக்கு சென்ற அனில்குமார தலைமையிலான பொலிஸ் குழு மாற்ற முற்பட்ட 5ஆயிரம் ரூபா தாள் ஒன்றினையும், அதனுடன் இணைந்து பேர்சுக்குள் இருந்து மேலும் ஒரு போலி 5ஆயிரம் ரூபா தாளியினையும் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க