இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் மன்னிப்பளிக்கும் சம்பிக்கவின் யோசனைக்கு மனோ ஆதரவு

23shares

போரின் போது குற்ங்களை இழைத்த இராணுவத்தினருக்கும்விடுதலைப் புலிகளுக்கும் பரஸ்பரம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற அமைச்சர்சம்பிக்கவின் கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தது தவறு என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன்தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றங்களை இழைத்த இராணுவத்தினரையும்உரிமைகளுக்காக போராடிய விடுதலைப் புலிகளையும் சமமாக கருத முடியாது என தமிழ்தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்த நிலையில் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்..

யாழ்ப்பாணத்திற்க நேற்று விஜயம் செய்த தேசியசகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் யாழ் ஊடக அமையத்தில்ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது அரசியல் கைதிகளின் விடயத்தில்அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்ற வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளீர்களாஎன அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மனோ கணேசன் அரசுக்கு வெளியேநடக்கும் போராட்டங்கள் அனைவருக்கும் தெரிகின்றது ஆனால் அரசுக்கு உள்ளே நடக்கும்போராட்டங்கள் வெளியே தெரிவதில்லை என குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க