லசந்தவை கொலை செய்ய உத்தரவிட்டது யார்?

41shares

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசியரியரும் மூத்த ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்ய உத்தரவிட்ட நபர் தொடர்பில் தமக்கு தெரியும் என சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராநாயக்க அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்யும் நோக்கம் இருக்காத போதிலும் அவரை அச்சுறுத்துவதற்காக சென்ற நபர், தவறுதலாக அவரை சுட்டதாக முன்னாள் உயர் அதிகாரியொருவர் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 36 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் சிலர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் இருந்தனர்.

கீத் நோயர், உப்பாலி தென்னக்கோன் மற்றும் பிரடி கமகே உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு இலக்கானதுடன், பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

இவர்களை தவிர சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவும் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த கொலைக்கு உத்தரவிட்ட நபர் யார் என்பது தமக்கு தெரியும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு காணப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஊடகங்களே இன்று நீதிபதிகளாக மாறியுள்ளன. எயார் லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தனது காதலி ஒருவருக்கு 24 இலட்சம் ரூபாய் பணத்தை செலவழித்துள்ளார். இவ்வாறான விடயங்களை வெளிக்கொண்டு வந்தவை ஊடகங்கள்தான். இன்று நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தவறுகளை ஊடகங்கள் தான் வெளிக்கொண்டு வருகின்றன.

இது தான் நல்லாட்சி மற்றும் ஜனநாயகம். இவ்வாறான விடயங்களை வெளிக்கொண்டு வந்தமை காரணமாகவே 36 பேரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொலை செய்திருந்தார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை பயமுறுத்துவதற்காக அனுப்பப்பட்ட நபர் அவரது கழுத்தில் துப்பாக்கியை வைத்த நிலையில் சற்று அழுத்தியதால் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து விட்டதாக அவரை அனுப்பிய முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார்.

'துப்பாக்கியை காட்டி பயமுறுத்திய போது சற்று அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு துப்பாக்கி வெடித்துவிட்டது ரஞ்சன்' என்று அந்த உயர் அதிகாரி என்னிடம் கூறினார். ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க மற்றும் கீத் நோயரை பயமுறுத்தி அடிபணிய வைப்பதற்காகவே நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்களாம். எனினும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்து ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என உறுதியளிக்கின்றோம்.

நல்லாட்சி அராசங்கத்தின் மூன்றரை வருட ஆட்சியின்போது ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் மீபுர இணையத்தளத்தின் ஆசிரியருமான பிரடி கமகே மீது மேற்கொள்ளப்பட்ட சிறு தாக்குதல் மற்றும் அதற்கு முன்பதாக முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன ஹம்பாந்தோட்டையில் வைத்து ஊடகவியலாளரின் கழுத்தை பிடித்த சம்பவத்தை தவிர ஊடகவியலாளர்களுக்கு எதிராக எந்தவித தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை.

அவ்வாறு இடம்பெற்றமை தொடர்பில் எனக்கு நினைவு இல்லை. இவ்வாறான நிலையில் மஹிந்தவின் ஆட்சி காலத்தை போன்ற யுகம் மீண்டும் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றேன்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்