ஒரே நாளில் 10 பேருக்கு தூக்கு தண்டனை- ஹம்பாந்தோட்டையில் பரபரப்பு

52shares

ஸ்ரீலங்காவின் தென்பகுதி மாவட்டமான, ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் 06 பேரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக காணப்பட்ட 10 பேருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட அறுவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்குனுகொலபெலஸ்ஸஇ திக்வெவஇ ரதன்பல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்படடிருந்த நிலையில், தங்காளை மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்துள்ளது.

நீண்டகாலமாக நடந்துவந்த வழக்கு விசாரணையின் பின்னர் 10 பேருக்கும் இன்று தங்காளை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவித மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்

இதையும் தவறாமல் படிங்க