யாழ் வீதிகளில் பிறேக் பிடிக்காமல் பயணித்த பேருந்தினால் பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட கதி!

56shares

வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபேருந்திற்கு திடீரென பிறேக் பிடிக்காததால் யாழில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச்சபைக்குச் சொந்தமான குறித்த பேருந்து காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தபோது அதன் முன்புறமாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளியை மோதியதில் தந்தையும்மகளும் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரில்முட்டாஸ் சந்திக்கு அருகில் நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

விபத்துக்குள்ளானபேருந்து முன்னர் காரைநகர் வழித்தடத்தில் யாழ்ப்பாணம் நோக்கி வரும்போது சங்கானையில்வேகத்தடை (பிறேக்) செயற்படவில்லை, ஸ்கியரிங் திருப்ப முடியவில்லை என்று சாரதி அலைபேசியில்யாருக்கோ தகவல் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்தும் பயணித்த பேருந்து காங்கேசன்துறைவீதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை அடைந்து முட்டாஸ் கடைச் சந்தியின் ஊடாகஸ்ரான்லி வீதியூடாகவே நகரை அடைய வேண்டிய நிலையிலேயே பேருந்தைத் திருப்புவதற்கு சாரதிமுயன்றுள்ளார் என்று அதில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேருந்தைத் திருப்பஇயலாத காரணத்தால் இ.போ.ச தனக்குரிய வழித்தடப்பாதையில் பயணிக்காது வேறு வழித்தடத்தில்காங்கேசன்துறை வீதிவழியாக நேரில் பயணிக்க முற்பட்டது. அதன்போதே பாடசாலை மாணவியை இ.போ.ச.மோதியது என்று தெரிவிக்கப்பட்டது.

பேருந்தின் சாரதிகைது செய்யப்பட்டார். அவர் விசாரணையில் உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில்காரைநகர் இ.போ.சபை முகாமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

“விபத்துக்குள்ளானஉந்துருளி மானிப்பாய் வீதி வழியாகப் பயணித்த நிலையில் வீதிக்குக் குறுக்கே பயணித்ததாகத்தெரிவிக்கப்பட்டது. இதேநேரம் பாடசாலை மாணவர்கள் உள்ள நிலையில் பாடசாலைக்கான வீதியில்பயணிக்க முடியும். இதே நேரம் பழுது தொடர்பில் எமக்கு எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க