அச்சுவேலியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : பின்னணி என்ன?

21shares
Image

யாழ்ப்பாணம் அச்சுவேலிபகுதியிலிருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மின்கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போதே மனித எச்சங்கள்மீட்க்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி பத்தமேனிசூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு இன்றையதினம் நிலத்தை தோண்டியுள்ளனர்.

இதன் போது நிலத்துக்குள்லிருந்து மண்ணைடோடு, கை,கால், உள்ளிட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எலும்புகள் கூடுகள்கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவஇடத்திற்கு வருகை தந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அச்சுவேலி பகுதியில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்தக் காலப் பகுதியில்புதைக்கப்பட்டிருக்காலாம் இவை யாருடையது என்பது தொடர்பான விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க