இலங்கை வங்கி உத்தியோகத்தரை பலியெடுத்த பயங்கரம் : வவுனியாவில் சம்பவம்

78shares
Image

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கார் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை

முச்சக்கர வண்டியின் சாரதியான மயிலங்குளம் பகுதியை சேர்ந்த 58 வயதான ராஜகருணா மற்றும் வவுனியா இலங்கை வங்கியின் உத்தியோகத்தரான பெரியதம்பனை பகுதியை சேர்ந்த 42 வயதான த.பாஸ்கரன் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா இலங்கை வங்கியில் காவலாளியாக பணி புரியும் கூமாங்குளத்தை சேர்ந்த தெய்வேந்திரன் விஜிதரன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க