போதநாயகியின் திருமண வாழ்வில் நடந்த கொடுமைகள்! உண்மையை வெளியிட்ட பெற்றோர்!! (காணொளி)

2781shares

கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளரான போதநாயகியின் மரணம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அவரது பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தும் சட்டமா அதிபருக்கான கடிதத்தை, வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளராக கடமையாற்றி வந்த செந்தூரன் போதநாயகி, சங்கமித்த கடற்கரையில் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

போதநாயகி தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டார என்பது இதுவரை தெரியவராத போதிலும் அவரின் உயிரிழப்புக்கு கணவரான செந்தூரனே காரணம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில், வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் போதநாயகியின் வீட்டிற்கு நேற்று நேரடியாக சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதன்போது போதநாயகியின் தாய் மற்றும் தந்தையுடன் கலந்துரையாடிய அனந்தி சசிதரனிடம், போதநாயகியின் திருமண வாழ்வின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் தாயார் எடுத்துக்கூறினார்.

விரிவுரையாளரான போதநாயகியின் மரணத்தில் அவரது கணவரான சு. செந்தூரன் மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாக போதனாயகியின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதன்போது சட்ட மா அதிபரின் மூலமாக விசாரணையை தீவிரப்படுத்துமாறு கோரி தனது சார்பில் சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் போதநாயகியின் பெற்றோர் கையளித்திருந்தனர்.

போதநாயகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் திருகோணமலை பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க