குப்பை ஏற்றும் உழவு இயந்திரத்தில் பயணித்த வவுனியா நகரசபைத் தலைவர்!

29shares
Image

வவுனியா நகர சபைத் தலைவர் நேற்றைய தினம் குப்பை சேகரிக்கும் உழவு இயந்திரத்தில் ஏறி வந்து வவுனியா மாவட்ட செயலக கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தனக்கு வாகனமொன்று பெற்றுத்தரப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இவ்வாறு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனக்காக வழங்கப்பட்டுள்ள வாகனம் பழுதடைந்துள்ள நிலையில் , இதுவரை தனக்கு மாற்று வாகனம் வழங்கப்படாமையினால் இவ்வாறு உழவு இயந்திரத்தில் வருகை தந்ததாக மேயர் ஈ.கௌதம் குறிப்பிட்டிருந்தார்.

மாற்று வாகனம் வழங்கப்படும் வரையில் இவ்வாறு உழவு இயந்திரத்தில் பயணிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க