தென்னிலங்கையில் சற்றுமுன் இடம்பெற்ற பயங்கரம்; 50 பேரின் நிலை?

111shares

ஹம்பாந்தோட்டை- லுனுகம்வெஹர பகுதியில் இரு பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதுண்டதில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தசம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையிலிருந்து கொழும்பிற்கு சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றும் தெஹியத்தகண்டியிலிருந்து காலிக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்குநேர் மோதுண்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதையும் தவறாமல் படிங்க