மக்களின் வாழ்வாதாரத்திற்கு அனுமதி மறுத்து, கொல்களத்திற்கு அனுமதி வழங்கும் அதிகாரிகள்!

15shares

கிளிநொச்சியில் இன்று மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட வாழ்வாதாரக் கொடுப்பனவு எந்தவித முன்னறிவித்தலும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் கிளிநொச்சியில் புனர்வாழ்வு நிலையத்தால் 16 பேரிற்கு வாழ்வாதார உதவியாக பசுமாடுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்படும் பசுமாடுகளை யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்ததாகவும், அந்த பசுமாடுகளை யாழ் கால்நடை வைத்திய அதிகாரி பரிசோதனைக்குட்படுத்திய பின்னர் கிளிநொச்சிக்கு கொண்டு சென்று பயணாளிகளுக்கு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

எனவே இன்றைய தினம் தமக்கு வழங்கப்படும் பசுமாடுகளை கொண்டு செல்வதற்காக கிளிநொச்சி புனர்வாழ்வு நிலையத்தில், தெரிவு செய்யப்பட்ட பயணாளிகள் கயிறுகளுடன் வந்து காத்திருந்தனர். எனினும் அவர்களுக்கு பசுமாடுகளை வழங்காது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் கால்நடை வைத்திய பரிசோதனை மேற்கொள்ளும் வைத்திய அதிகாரியால் அப்பசுமாடுகளை கிளிநொச்சிக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வைத்திய அதிகாரியிடம் கேட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து மாடுகள் வெளியிடங்களுக்கு அனுப்புவதற்கு அனுமதி இல்லை வழங்குவதில்லை எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக புனர்வாழ்வு ஆணையாளர் கருத்துத் தெரிவிக்கையில், வறுமையில் வாடும் மாக்களுக்கு வாழ்வாதாரத்திற்காக வழங்கவிருந்த பசுமாடுகளுக்கு அனுமதி மறுக்கப்படும் இந் நிலையில் இறைச்சிக்காக வெட்டும் மாடுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க