முக்கிய அறிவித்தல்: பலாலி விமான ஓடுபாதைக்கு அண்மையிலுள்ள காணிகள் தொடர்பானது!

284shares

வலிகாமம் வடக்கில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் காணிகள் ஒருபகுதி விரைவில் விடுவிக்கப்படவுள்ளது. குறிப்பாக பலாலி விமான நிலைய ஓடுபாதை அண்மையில் உள்ள காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.

ஜே/238 கிராம சேவையாளர் பிரிவு கட்டுவன் காசி அம்மன் கோயில் பக்கமுள்ள மக்களின் காணி உரிமையாளர்கள் தங்கள் காணிஉறுதி பிரதி, அடையாளஅட்டை பிரதி , குடும்ப பங்கீட்டு அட்டை பிரதி என்பவற்றை பைலில் வைத்து கட்டுவன் ஊரங்குனை ஜே /238 கிராமசேவையாளரிடம் கொடுத்து பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வார ஆரம்பத்தில் முன்னர் இவற்றினை கொடுக்காது பதிந்தவர்களும் மீள இவற்றை கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை வியாழக்கிழமை முதல் ஒரு வாத்துக்குள் (கூடியவிரைவில்) பதிவினை மேற்கொள்ளுமாறு கிராமசேவையாளர் அறிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க