மஹிந்த-மைத்திரியின் அதிரடி அறிவிப்பு!

2059shares

சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் நேற்று மாலை அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

அவசரமாக அழைக்கப்பட கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் தமது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி தம்மிடம் தற்பொழுது 113 உறுப்பினர்கள் பெரும்பான்மை பலம் உள்ளதாக ஜனாதிபதியும் பிரதமரும் அறிவித்தனர்.

மேலும் புதிய அமைச்சர்களாக 10 பேருக்கும் மேற்பட்டோர் இன்றிரவு பதவி ஏற்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க