விசேட செய்தி - ரணில் உள்ளிட்ட குழுவினரை நெருங்கிவந்துள்ள ஆபத்து?

627shares

மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்டுத்தி வருவதாக குற்றம் சுமத்தி பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றவியல் விசாரணைத் தினைக்களத்தினரிடம் முறைப்பாடு மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் குறித்த முறைப்பாட்டினை முன்வைக்கவுள்ளதாக அந்தச் சங்கத்தின்பிரதான செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபாலவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டு13 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும் தேசிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து பிரதமர் இல்லமான அலரி மாளிகையில் தங்கியிருப்பதனூடாக அவர் அரசசொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவது தெளிவானதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் இல்லங்களை மீள ஒப்படைக்கவில்லையெனவும், அவர்கள் தமது அமைச்சுகளுக்குள் உள்நுழைந்து பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் இந்தச் சங்கத்தின் பிரதானசெயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க